கிணற்றுக்குள் தவறி விழுந்த யானைக்குட்டி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

0 1498
கிணற்றுக்குள் தவறி விழுந்த யானைக்குட்டி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சகுந்தபாடா கிராமத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த யானைக்குட்டியை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ராஸ்கோவிந்த்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்திற்குள் நேற்று யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து சத்தமிட்டதாகவும் அந்த யானைக்கூட்டம் திரும்பிச்செல்லும் போது கூட்டத்தில் இருந்த குட்டியானை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிணற்றுக்குள் தண்ணீரை விட்டு, யானைக்குட்டியை மிதக்கச்செய்து அதிகாரிகள் அதை பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments