நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

0 4023
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் "தளபதி" படத்தில் நடித்த ஷோபனா, தற்போது நாட்டியப் பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் முதல் நாளில் இருந்த உடல் பாதிப்பு பின்னர் குறையத் தொடங்கியதாகவும், தடுப்பூசி 85 சதவீதம் பயனளிப்பதாகவும் நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments