மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பர்த்து சிசு உயிரிழந்த விவகாரம் ; பிரசவம் பார்த்த 3 செவிலியர்கள் கைது

குழந்தை இறந்து பிறந்த புகாரில், தனியார் மருத்துவமனை செவிலியர்கள் 3 பேர் கைது
திருவள்ளூரில், கடந்த 2020-ஆம் ஆண்டு செவிலியர்கள் பிரசவம் பர்த்து சிசு உயிரிழந்த சம்பவத்தில் 3 செவிலியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊத்துக்கோட்டையை சேர்ந்த காமேஷ் என்பவர் தனது மனைவி திவ்யா என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்ததாகவும், செவிலியர்களின் பிரசவம் பார்த்து குழந்தை இறந்து பிறந்ததாகவும் காவல் நிலையத்தில் காமேஷ் புகார் அளித்தார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணையில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, மரியா, சுகன்யா, ரம்யா ஆகிய 3 செவிலியர்களை கைது செய்தனர்.
மேலும், ஆந்திராவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அருணா என்ற செவிலியரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments