இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்.!

0 1861

குஜராத் கடற் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

படகில் பயணித்த 10 பேரை கைது செய்ததாக தெரிவித்த அதிகாரிகள், படகில் இருந்து  2 ஆயிரம் கிலோ மீன் மற்றும் 600 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றபட்டதாக தெரிவித்தனர்.

கடலோர காவல் படையின் ரோந்து படகை கண்டதும் தப்பிக்க முயன்ற பாகிஸ்தான் படகை, விரட்டிச் சென்று கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கான காரணம் தெரிவிக்காத நிலையில் போர்பந்தரில் வைத்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments