நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி பலி.!

0 1701

அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

19 மாடி குடியிருப்பில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் லேசான காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments