அகமதாபாத்தில் தன் நாயின் பிறந்த நாளை கொண்டாட ரூ.7 லட்சம் செலவில் பார்ட்டி.. ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 பேர் கைது.!
அகமதாபாத்தில் தன் நாயின் 2-வது பிறந்த நாளை கொண்டாட 7 லட்ச ரூபாய் செலவில் பார்ட்டி வைத்த உரிமையாளர்களை, கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணாநகர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ரோந்து சென்ற போலீசார் கலை அலங்காரம், துள்ளல் இசையுடன் நடனமாடி தன் நாயின் 2-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய சகோதரர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ஊரடங்கு விதிகளை மீறியது, முக கவசம் அணியாதது, அனுமதி பெறாமல் பார்ட்டி நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
Comments