கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில், மூன்றரை வயது சிறுவனை விட்டு சென்ற மர்மநபர்.!

0 8946

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில், மூன்றரை வயது சிறுவனை விட்டு சென்ற மர்மநபரை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள கூழ் கடைக்கு மூன்றரை வயது சிறுவனுடன் வந்த மர்ம நபர், கடை உரிமையாளர் பெண்ணிடம் சிறுவனை பார்த்து கொள்ளமாறு கூறி சென்றதாக கூறப்படுகிறது.

இரவு வரை நபர் திரும்பி வராததை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் சிறுவன் உறுதியான தகவல் அளிக்காத நிலையில் பேருந்து நிலைய சுற்றுவட்டரத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments