ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

0 1645

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஹசன்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரித்து வருவதாகவும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments