டெல்லியில் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்.!

டெல்லி அருகே நொய்டாவில் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.சில நாட்களுக்கு முன்பு ஒரு தாய் தனது 12 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து வீட்டுக்கு வெளியே விளையாடிய சிறுமியைக் கடத்தியவர்களை பாதல் புர் பகுதி காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் சிறுமிகளைக் கடத்தும் கும்பலை சேர்ந்த 3 ஆண்கள் 3 பெண்கள் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தொடர்புடைய ஒரு பெண் சிறுமிகளை ஆசை காட்டி அழைத்துப் போய் ஹரியானாவில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைப்பார். பின்னர் அந்த சிறுமிகள் பணத்துக்காக வயதான ஆண்களுக்கு மணமுடிக்க வைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்
Comments