திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசன நேரம் குறைப்பு

0 10335

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 10ந்தேதி முதல் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கத்தேரோட்டம் ரத்து என்றும், அபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மார்கழி மாத பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments