தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு : 12 பேர் உயிரிழப்பு

0 4132

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 12 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 808 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகபட்சமாக சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 186 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 512 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 12 பேர் உயிரிழந்த நிலையில், 51 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் தொற்று பாதிப்புடன் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த 179 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments