மடை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சகோதரர்கள் பத்திரமாக மீட்பு

0 2407
பெரிய கண்மாய் அருகே மடை சரிந்து விழுந்த விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெரிய கண்மாய் அருகே மடை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சகோதரர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சகோதரர்களான அப்துல் கலாம், சந்தோஷ் ஆகியோர் கமுதி பெரிய கண்மாய் பகுதியில் இருந்த பழைய மடையின் மேல் அமர்ந்து தூண்டிலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென மடை சரிந்து விழுந்ததில் இருவரும் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர். இருவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கமுதி தீயணைப்புத்துறையினர், பொக்லைன் இயந்திர உதவியுடன் இரு இளைஞர்களையும் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments