பல கிலோமீட்டர் தூரம் பயணித்து மீண்டும் உரிமையாளரிடம் வந்த பூனையால் நெகிழ்ச்சிஅடைந்த உரிமையாளர்

0 5176
பல கிலோமீட்டர் தூரம் பயணித்து மீண்டும் உரிமையாளரிடமே வந்த பூனை

விழுப்புரத்தில் பராமரிப்பாளரால் 15 கிலோமீட்டர் தூரத்தில் வெட்டவெளியில் விட்டு வரப்பட்ட பூனை, சில நாட்கள் கழித்து மீண்டும் அவரையே தேடி வந்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சோழன் தெருவைச் சேர்ந்த கென்னடி, கொரோனா காலத்தில் தன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த பூனையை கடந்த 2 ஆண்டுகளாக செல்லமாக பராமரித்து வந்துள்ளார். ஆனால், பூனையின் சேட்டை தொல்லையாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொடர்ச்சியாக புகார் கூறி வந்ததால், பூனையை தனது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தளவானூர் கிராமத்தில் கொண்டு சென்று விட்டு வந்துள்ளார்.

பின்னர் மனம் கேட்காமல் அவர் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது பூனை அந்த இடத்தில் காணப்படவில்லை. இதனால் வருத்தமுடன் வீடு திரும்பிய கென்னடி, மறுநாள் காலையில தனது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் அந்த பூனை நின்றுகொண்டிருந்துள்ளது. அதைக்கண்டதும் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்த அவர் மீண்டும் அந்த பூனையை பராமரிக்க தொடங்கியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments