அப்பல்லோ மருத்துவமனையின் போலி ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு காரில் சுற்றிய இருவருக்கு அபராதம்

0 2971
தனியார் மருத்துவமனையின் போலி ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு காரில் சுற்றிய இருவருக்கு அபராதம்

சென்னையில் தனியார் மருத்துவமனையின் போலி ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு காரில் சுற்றிய இருவருக்கு அபராதம் விதித்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கை ஒட்டி சென்னை மாநகர் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார், அவசர, அவசியத் தேவைகளுக்காக செல்வோரை மட்டும் தீர விசாரித்து அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை வழியாக பிரபல அப்பல்லோ மருத்துவமனையின் ஸ்டிக்கரை ஒட்டியவாறு சென்ற மாருதி சுசுகி கார் ஒன்றை போலீசார் மடக்கினர்.

அரைக்கால் சட்டையுடன் உள்ளே இருந்த இரண்டு இளைஞர்கள் தங்களை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதற்கான அடையாள அட்டையோ, உரிய ஆவணங்களோ அவர்களிடம் இல்லாததால் அபராதம் விதித்த போலீசார், காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments