ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட 90கிலோ தங்க நகைகள் பறிமுதல்

0 2217
ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட 90கிலோ தங்க நகைகள்

சென்னை தியாகராயர் நகரில் வாகன சோதனையின் போது 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு பின் ஒப்படைக்கப்பட்டது.

தியாகராயர் நகர் பேருந்து பணிமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாகச் சென்ற மாருதி ஈகோ வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பை ஒன்றில் 90 கிலோ தங்க நகைகளும் தங்கக் கட்டிகளும் இருந்தன.

விசாரணையில் சென்னையிலுள்ள 30 நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது.

முறையான ஆவணங்கள் இல்லாததால் நகைகள் மாம்பலம் காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வைர நகை கடை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையம் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுச் சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments