புதுச்சேரியில் கடலலையில் சிக்கி கோவை மாணவி உயிரிழப்பு

0 7807
புதுச்சேரியில் கடலலையில் சிக்கி கோவை மாணவி உயிரிழப்பு

புதுச்சேரியில் குத்துச்சண்டை போட்டிக்கு சென்ற கோவை தனியார் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவி பூமிகா புதுச்சேரி தலைமை செயலகம் எதிரிலுள்ள கடற்கறையில் அலையில் சிக்கிஉயிரிழந்தார் .

பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடாஜலபதியின் மகளான இவர், கோவை தனியார் கல்லூரி மூலம் புதுச்சேரியில் நடைபெரும் குத்துச்சண்டை போட்டியில் பங்குபெற 17 சக மாணவிகளுடனும் 4 பயிற்சியாளர்களுடனும் வந்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் போட்டிகள் இரத்தான நிலையில் அவர்கள் ஊரை சுற்றிப்பாரக்க முடிவு செய்து புதுச்சேரி தலமை செயலகத்திற்கு முன்னால் அமைந்திருக்கும் செயற்கை மணல் பரப்பில் இறங்கி கடலுக்குச்சென்றுள்ளனர்.

அங்கு மாணவி பூமிகாவுடன் 2மாணவிகள் மற்றும் 1 பயிற்சியாளர் கடலில் விளையாடிய போது இராச்சத அலையில் சிக்கியுள்ளனர். இதையடுத்து சக மாணவிகள் இருவரையும் பயிற்சியாளரையும் உள்ளூர்வாசிகள் காப்பாற்றினர்.

காவல்துறையினர் சிறிது நேரம் தேடிய பின் பூமிகவையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தார். இது குறித்து பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments