ஆன்லைன் கேம் மூலம் பழக்கமான ஆண் நண்பரை தேடி பாகிஸ்தான் செல்ல முயற்சித்த பெண்... அறிவுரைகள் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்த போலீசார்

0 3848

ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் பழகி, தனது ஆண் நண்பரை சந்திக்க பாகிஸ்தானுக்கு செல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

டோல்பூரை சேர்ந்த திருமணமான அப்பெண், பாகிஸ்தானை சேர்ந்த அலி என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் லுடோ விளையாடிக் கொண்டிருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது குடும்பத்தை விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தானுக்கு செல்ல அமிர்தசரஸ் பகுதியில் இருந்து அட்டாரிக்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை பிடித்து, விசாரித்து, எச்சரித்து, அறிவுரைகள் கூறி, மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments