அரியலூரில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் 8 பேர் கைது

0 13577

அரியலூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற 15 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது குறித்து, மருத்துவ ஊழியர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோரை கைது செய்தனர்.

இதேபோல், அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர்களின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், கட்டாய திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments