விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ.5.15 லட்சத்தை மீட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

0 2863

காஞ்சிபுரத்தில், விபத்தில் சிக்கியவரிடமிருந்த 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத், தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபொழுது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால் மயக்கமடைந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரிடமிருந்து 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மீட்டு அவரின் உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments