இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1.59 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
24 மணி நேரத்தில், 327 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதுடன், 40 ஆயிரத்து 863 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10 புள்ளி 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை 3 ஆயிரத்து 623 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments