போலியான கால் சென்டர் மூலமாக வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த கும்பலை கைது செய்த போலீசார்.!

0 2248

போலியான கால் சென்டர் மூலமாக வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்து வந்த டெல்லி கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக பெண் ஒருவர் அளித்த புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் டெல்லியில் போலியான கால் சென்டர் நடத்தி வந்த 8 பேர் கொண்ட மோசடி கும்பலை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப், 26 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments