பஞ்சாபின் எதிர்கால அரசியலை எனது தலைமையிலான கூட்டணி தீர்மானிக்கும் - அமரீந்தர்சிங்

0 6833

பஞ்சாபின் எதிர்கால அரசியலை தமது தலைமையிலான கூட்டணி தீர்மானிக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த அமரீந்தர்சிங், தேர்தலை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக கூறினார். மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை  கோவிட் கால விதிகளை மீறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் அமரீந்தர் சிங் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியிருக்கும் அமரிந்தர்சிங், பாஜக , சிரோண்மணி அகாலி தளத்தின் சான்யுக்த் அணி  ஆகிய கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments