ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் புது உச்சம்... ஒரு லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 2494

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது.

அங்கு வகை தொகையின்றி வைரஸ் தொற்று பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 16ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதாகவும், சுய பரிசோதனை முறைகளால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விக்டோரியா மாகாணத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடும் கட்டுபாடுகளை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments