ஆயுதப்படைகளில் பெண்கள் சேருவதை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2081

ஆயுதப்படைகளில் பெண்கள் சேருவதை அதிகரிக்கும் வகையில், 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சைனிக் பள்ளிகளில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்துக் கொள்ளவும், பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்புகள் வழங்கவும், ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவும் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

புதிய சைனிக் பள்ளிகளை திறப்பது என்ற முடிவு, நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற தங்களது கனவை நனவாக்க பெண்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments