ஈரோட்டில் ஓட்டுநரை ஏமாற்றி வாடகை காரை திருடிச் சென்ற 2 மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள்.!

0 8747

ஈரோட்டில், ஓட்டுநரை ஏமாற்றி வாடகை காரை திருடிச் சென்ற இரண்டு மர்மநபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா, அப்பகுதியில் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வருகிறார். அவரிடம் கோவை செல்வதற்கு வாடகைக்கு கார் தேவை என 2 பேர் கேட்டுள்ளனர்.

இதையடுத்து கோபால் என்ற ஓட்டுநருடன் இருவரும் காரில் ஏறி கோவை நோக்கி சென்றுள்ளனர்.  சரவணம்பட்டி அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற ஓட்டுநரை கவனித்த இருவரும் காரை எடுத்துக்கொண்டு அதிவேகமாக தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments