விருதுநகரில் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நென்மேனி பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, அவரது மகன் கேசவன் மற்றும் உறவினரின் மகன் பூர்ணகோகுல் ஆகிய மூவரும் நென்மேனியில் உள்ள வைப்பாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக பூர்ணகோகுல் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் சிக்கியதால், அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கிராம மக்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து, இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments