கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு கேரவான்கள் அறிமுகம்

0 2653

கேரளத்தில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளைக் கவர புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில் கேரவன்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பார்க்கிங் செய்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய திட்டத்தை கோழிக்கோட்டில் சுற்றுலா அமைச்சர் முகமது ரியாஸ் நேற்று தொடங்கி வைத்தார்.

சினிமா நட்சத்திரங்கள், விஐபிக்கள் மட்டும் பயன்படுத்தும் கேரவான்களை சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் என்று அமைச்சர் தெரிவித்தார் .அதி நவீன வசதிகள் கொண்ட இந்த கேரவான்கள் கேரளாவின் சுற்றுலாத் துறைக்கு புத்துணர்ச்சியைத் தரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுலாவை பிரபலப்படுத்த 100க்கும் மேற்பட்ட கேரவான்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments