திருப்பூரில் பத்திரிக்கையாளர் எனக் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!

0 7526

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பத்திரிக்கையாளர் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கே.என்.புரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது சகோதரி ஜெயபிரியாவின் அரசு வேலைக்காக விஜயகுமார் என்பவரிடம் இரு தவணைகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சொன்னபடி விஜயகுமார் வேலை வாங்கித் தராததால் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து விஜயகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 20க்கும் மேற்பட்டவர்களிடம் 50லட்சம் ரூபாய்க்கு விஜயகுமார் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments