உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா பாஜக ?

0 4046

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, தங்களுக்கு போட்டியாக எந்த ஒரு எதிர்க்கட்சியும் இல்லை என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீண்டும் தங்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற போராடி வருகின்றனர். கடந்த 1985 ஆம் ஆண்டு முதலே எந்த ஒரு முதலமைச்சரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

இத்தேர்தலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் யோகி ஆதித்யநாத், 37 வருட மரபை உடைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மார்ச் 10 ஆம் தேதி தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments