கொரோனா "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

0 3645
தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் என 10 லட்சத்து 75 ஆயிரம் பேரை பட்டியலிட்டுள்ளது. இவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்களில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோய் பாதிப்பு கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 39 வது வாரம் அல்லது 9  மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

எந்தவிதமான சான்றும் இல்லாமல் ஆதார் அட்டை மட்டுமே பயன்படுத்தி தடுப்பூசி மையங்களில் இவர்கள் வருகின்ற பத்தாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணைகளில் எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசி ஆக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments