சென்னையில் நாளை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் - காவல்துறை

0 3183
சென்னையில் நாளை முழு ஊரடங்கின்போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.

சென்னையில் நாளை முழு ஊரடங்கின்போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சென்னை மாநகர் முழுவதும் 312 இடங்களில் வாகனத் தணிக்கை மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ள மாநகரக் காவல்துறை, அப்படி அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோர் உரிய அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments