கொரோனா 3-ஆம் அலை பிப்.1 முதல் 15க்குள் உச்சமடையும் - சென்னை ஐஐடி எச்சரிக்கை

0 3886
நாட்டில் கொரோனா தொற்றின் 3-ஆம் அலை பிப்ரவரி 1 முதல் 15-ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் 3-ஆம் அலை பிப்ரவரி 1 முதல் 15-ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதை குறிக்கும் ஆர்-நாட் (R-naught) மதிப்பு 4 என்ற அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை ஆர்-நாட் மதிப்பு 2 புள்ளி 9 என்ற வீதத்தில் இருந்தாகவும், ஜனவரி 1 முதல் 6ஆம் தேதி வரை அந்த மதிப்பு 4 என்ற அளவில் உயர்ந்துவிட்டதாக ஐஐடி தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைத்தல், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அதிகப்படுத்தும்போது மக்கள் ஒருவரோடு ஒருவர் சந்திப்பது குறையும் என்றும் அப்போது ஆர்-நாட் மதிப்பு குறையத் தொடங்கும் என்றும் சென்னை ஐஐடி கணிதத் துறையின் உதவிப் பேராசியர் ஜெயந்த் ஜா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments