மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.. லாரிக்கு அடியில் சிக்கிய தொழிலாளி நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்பு..

0 3882
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மது பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் லாரிக்கு அடியில் கால் சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மது பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் லாரிக்கு அடியில் கால் சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.

திருமழிசை பகுதியில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையிலுள்ள மதுக்கடை ஒன்றுக்கு அந்த லாரி சென்றது.

மதுக்கடைக்கு வெகு அருகில் இருந்த பள்ளம் ஒன்றை ஓட்டுநர் கவனிக்காத நிலையில், சக்கரங்களில் ஒன்று அந்த பள்ளத்தில் இறங்கி லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற கூலித் தொழிலாளியின் வலது கால் லாரிக்கு கீழ் சிக்கிக் கொண்டது.

நீண்ட நேரம் போராடியும் காலை வெளியே இழுக்க முடியாத நிலையில், ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு, லாரி லேசாக அசைக்கப்பட்டு மார்த்தாண்டம் மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments