மதுரை மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு

0 2069
மதுரை மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மதுரையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஹென்றி டிபேன் என்பவரை செயல் இயக்குனராகக் கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பகம் என்ற இந்த தொண்டு நிறுவனம், 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து நிதியை பெறுவதற்கான உரிமத்தை ரத்து செய்த பின்பு நிறுவனத்துக்கான வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு நிதி எடுக்கப்பட்டுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

அதன் பேரில் நிறுவனத்தின் மீது “மோசடி செய்தல், ஏமாற்றுதல்” உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments