தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது ; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 2891
தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது

தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது இணைய பக்கத்தில், நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 2 கோடிக்கும் அதிகமான சிறார்கள் தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments