நாளை முழு ஊரடங்கு..! எது இயங்கும்..? எது இயங்காது..?

0 17018
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க படுவதால் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க படுவதால் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நாளை அதிகாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரெயில்களும், இரவு நேரங்களில் புறப்படக்கூடிய ரெயில்களும் வழக்கம் போல் இயங்குமென கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகர பேருந்துகள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும்,மக்களை ஏற்றி செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மின்சார ரெயில்கள் 50 சதவீதம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments