கொரோனா பரவிய மகனிடம் இருந்து தன்னை காக்க காரின் டிக்கியில் பூட்டி வைத்த கொடூர தாய்..

0 2933
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனிடம் இருந்து தனக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக காரின் டிக்கியில் வைத்து அவனை பூட்டி வைத்திருந்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனிடம் இருந்து தனக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்காக காரின் டிக்கியில் வைத்து அவனை பூட்டி வைத்திருந்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த சாரா பீம் என்ற ஆசிரியை கடந்த 3-ம் தேதியன்று தனக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக காரில், டிரைவ் - த்ரூ எனப்படும், காரில் இருந்த படியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சாரா பீம்-ன் காரின் பின்புறத்தில் இருந்து சத்தம் வருவதை பார்த்து அது குறித்து கேட்டுள்ளனர். அப்போது தனது மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனக்கு பரவாமல் இருக்க அவனை டிக்கியில் வைத்து பூட்டி வைத்திருப்பதாக கூறியுள்ளார். 

இது குறித்து ஊழியர்கள் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சிறுவனை விடுவித்ததுடன், தாயார் சாராபீமை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments