செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது ஏன்? - ஐ.ஜி. விளக்கம்

0 3362
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் அப்பு கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் தினேஷ், மொய்தீன் ஆகியோர், செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் தலைமையிலான தனிப்படையால், என்கவுன்டர் செய்யப்பட்டனர்..

இந்நிலையில், போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாலும், காவலர்களை அரிவாளால் வெட்டியதாலும் வேறு வழியின்றி தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர், என்று ஐ.ஜி. சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

இதனிடையே, என்கவுடன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில், வருவாய் கோட்டாட்சியர் சாஜிதா பர்வீன் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments