பெப்சி தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் வரை ஊதிய உயர்வு - ஆர்.கே.செல்வமணி

0 3389
பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரும் தை மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதம் முதல் திரைப்படத் தொழில் சீரடைந்து வந்ததாகவும், வலிமை, ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருந்தால், நிலைமை மேலும் சீராகி இருக்கும் என்ற அவர், பெரிய நடிகர்களிடம் மீண்டும் மீண்டும் சம்மேளன ஊழியர்களுக்காக நிதியுதவி கேட்பதற்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments