வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்ச வரம்பு உயர்வு..!

0 1710
வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பைத் தேர்தல் ஆணையம் உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு, ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பைத் தேர்தல் ஆணையம் உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு, ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பெரிய மாநிலங்களில் 70 இலட்ச ரூபாயில் இருந்து 95 இலட்ச ரூபாயாகவும், சிறிய மாநிலங்களில் 54 இலட்ச ரூபாயில் இருந்து 75 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பெரிய மாநிலங்களில் 28 இலட்ச ரூபாயில் இருந்து 40 இலட்ச ரூபாயாகவும், சிறிய மாநிலங்களில் 20 இலட்ச ரூபாயில் இருந்து 28 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. அதன்படி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவு உச்சவரம்பு 40 இலட்ச ரூபாயாகவும், மணிப்பூர், கோவா மாநிலங்களில் வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவு உச்சவரம்பு 28 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments