பெங்களூரு அருகே அதிவேகமாக சென்ற லாரி, காரின் மீது மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

0 2057
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே கனகபுரா சாலையில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில், காரில் பயணித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே கனகபுரா சாலையில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில், காரில் பயணித்த 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தமிழக பதிவெண்ணை கொண்ட அந்த லாரி, கெங்கேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த காரின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்றுக் கொண்டிருந்த மற்ற வாகனங்களிடையே சிக்கி நசுங்கியுள்ளது. இதில், காருக்குள் இருந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதே விபத்திற்கான காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments