கொரோனா பாதிப்பால் குரோம்பேட்டை போத்தீஸ் கடையை மூட உத்தரவு

0 3589
கொரோனா பரவலால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையை மூட, மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையை மூட, மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குரோம்பேட்டை பகுதியில் உள்ள போத்தீஸ் துணி கடையில் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடையில் பணியாற்றும் 250 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, போத்தீஸ் ஜவுளி கடையை மூடி, கிருமிநாசினி தெளிக்க செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments