பொங்கல் பரிசு பைகள் தைப்பதில் காலதாமதம்.. தங்களது சொந்த பையை எடுத்து வந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்ல தமிழக அரசு வேண்டுகோள்

0 3349

பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் பைகளை தைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் பயனாளிகள் தங்களது சொந்த பைகளை எடுத்து வந்து பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறும், போதுமான பைகள் கையிருப்பு வந்தபின்
பைகளை தனியே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பைகளைத் தைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிசுப் பொருட்களை பெறுவதில் தடை ஏற்பட வேண்டாம் என்பதால் தங்களது சொந்த பைகளை எடுத்து வந்து பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது.

பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் பயனாளிகள் பின்னர் பிற பொது விநியோகத் திட்டப் பொருள்களை வாங்க வரும்போது பைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்காக, அவர்களுக்குத் தனியே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments