சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபருக்கு வலைவீச்சு

0 2069
சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்

கோவையில், சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபரை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராதா என்ற பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை அம்மன் குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி, கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல மளிகைக் கடைக்கு சென்று வீடு திரும்பிய ராதாவின் முகத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியுள்ளான்.

இதில் ராதாவிற்கு இடது பக்க முகம் மற்றும் தோல் பட்டையில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், 3 தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments