"வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு உறுதியாக அனுமதியில்லை" - அமைச்சர் சேகர்பாபு

0 2156

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவில் மாற்றமில்லை என்றும் விசேஷ நாட்களில் மட்டும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாட்டுக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை புரசைவாக்கம் சி.எஸ்.ஐ எவர்ட் பள்ளியில் 15 முதல் 18 வயத்தினருக்கான கோவிட் தடுப்பூசி போடும் முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

குறிப்பிட்ட நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியில்லை என்றும், நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் வழக்கம்போல் தொடரும் என்றும், அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments