சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

0 9383

கர்நாடகாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள அத்தியூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வயல்வெளியில் பெரும் சப்தத்துடன் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியதைப் பார்த்த மக்கள் அதனை வேடிக்கை பார்க்கக் குவிந்தனர்.

விசாரணையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரத்- ஷீலா என்ற வயதான தம்பதி, உடல்நலம் பாதித்து, சிகிச்சைக்காக கேரளா செல்வது தெரியவந்தது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியதாக பைலட் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments