ஜனவரி 10 முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1942

இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10 அன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 11, 12 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணையில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments