ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து இரு வீட்டில் கொள்ளை - பணம், நகை திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் அடுத்தடுத்து 2 பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டப்பட்டு இருந்த சீனி முகம்மது என்பவரின் வீட்டை உடைத்து 15 ஆயிரம் ரொக்கம், தங்க காசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அதேபகுதியில் மற்றொரு பூட்டப்பட்ட வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 40 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கத்தை திருடியதாக சொல்லப்படுகிறது.
உரிமையாளர்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடந்ததா என்றும் சிசிடிவியில் சந்தேகிக்கும் வகையில் தெரிந்த 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments