அமிர்தசரசுக்கு தனிவிமானத்தில் வந்த 285 பேரில் 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 2142

அமிர்தசரசுக்கு ரோம் நகரில் இருந்து தனிவிமானம் ஏற்பாடு செய்து வந்த 285 பேரில் 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

75 பேரின் முடிவுகள் தெளிவாக இல்லை என்பதால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 173 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு செய்து பயணிகள் ரோம் நகரில் இருந்து அமிர்தசரஸ் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments