இந்தியாவில் 150 கோடி டோஸ் இலக்கை எட்டியது தடுப்பூசி இயக்கம்... பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் 150 கோடி டோஸ்களை எட்டியது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.இந்திய வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க நாள் என்றும் புதிய மைல்கல் எட்டப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இயக்கம் வேகம் கொண்டிருந்தாலும் மக்கள் கொரோனா காலத்தின் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.மருத்துவர்கள், அறிவியல் நிபுணர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தடுப்பூசி இயக்கத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும நன்றி தெரிவிப்பதாகவும் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments